டிக்கெட் எடுக்காத பயணிகள் மூலம் ஒரே மாதத்தில் மத்திய ரெயில்வே ஈட்டிய வருவாய் ரூ.42.15 கோடி..!

இந்திய ரெயில்களில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ரெயில்களை பயன்படுத்துபவர்கள் அதிகரித்துள்ளனர். இதனால் இந்திய ரெயில்வேயின் வருவாய் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம் டிக்கெட் எடுக்காமல் ரெயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படுகிறது. இது தவிர அனுமதிப்பட்டதை விட அதிக அளவில் உடைமைகளை கொண்டு வருபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், ரெயிலில் சரியான டிக்கெட் மற்றும் அதிக அளவிலான உடைமைகளை கொண்டு சென்ற குற்றங்களுக்காக கடந்த ஏப்ரல்-மே இடையிலான ஒரு மாத காலகட்டத்தில் 7.59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே தெரிவித்துள்ளது. அதன்மூலம் 42.15 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இதுபோன்று 7.25 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும், அதன்மூலம் 41.22 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆள்மாறட்டம் செய்து பயணம் செய்ததாக 1,517 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதன்மூலம் ரூ.12.77 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
author avatar
Dinasuvadu desk

Leave a Comment