தினேஷ் கார்த்திக் இந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் சஹாவிற்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார்.
அயர்லாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து பெற்றது. இதையடுத்து,ஆஃப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் விளையாடவுள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் போட்டி,வரும் ஜூன் 14-ம் தேதி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.இப்போட்டியில் விளையாடும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
ஐபிஎல் போட்டியின்போது ஏற்பட்ட காயம் குணமடையாததால் சஹா விலகியுள்ளார். இந்நிலையில் சஹாவிற்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது இந்திய கிரிக்கெட் வாரியம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…
Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படம் உலகம் முழுவதும் 11 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில்…