ஜல்லிக்கட்டு கோலாகலம் !தமிழகத்தில் பல்வேறு பகுதியில் உற்சாகம்…

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன ஜல்லிக்கட்டுப் போட்டிகள்.

கரூர் மாவட்டம் தோகைமலையை அடுத்த இராச்சாண்டார் திருமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 350 காளைகளும் 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
Related image
பாத்திரங்கள், சைக்கிள், தங்க காசு, பணம் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. பார்வையாளர்கள் பாதுகாப்பாக நின்று பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காயமடைந்த 2 வீரர்களுக்கு அந்தப் பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related image
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆவாரங்காட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு 700 காளைகளும், 375 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்யப்பட்டனர். புதுக்கோட்டை , மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப் போட்டு பிடித்தனர்.
Image result for ஜல்லிகட்டு
தொடர்ந்து மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் கட்டில், சைக்கிள், சில்வர் குடம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், நத்தமாடிபட்டி ஜல்லிக்கட்டில் 400 மாடுபிடி வீரர்களும் 450 காளைகளும் பங்கேற்றுள்ளனர். மாடு பிடி வீரர்களுக்கு பரிசு பொருட்களாக தங்க காசு ‘சைக்கில் ,பீரோ, பாத்திரங்கள் உள்ளிட்டவை வழங்கபடுகின்றனர்.

Leave a Comment