ஜனநாயகத்தை காப்பாற்ற நினைப்பர்வர்கள் மனம் மாற மாட்டார்கள்- மல்லிகார்ஜுன கார்கே..!

ஜேடியு தலைவரும், பீகார் முதலமைச்சருமான முதல்வர் நிதிஷ் குமார் தனது கூட்டணி கட்சியான லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்ஜேடியுடன் விலகி நாளை பாஜக ஆதரவுடன் பீகார் முதல்வராக பதவியேற்கலாம் என நிதிஷ் குமார்  முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த தகவலால் பீகாரில் அரசியல் கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது குறித்து (ஆர்ஜேடி) RJD மற்றும் ஜேடியு (JDU) ஆகிய இரு தரப்பிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த செய்தி இந்தியா கூட்டணியை பெரிதும் பாதித்துள்ளன.

காங்கிரஸுக்கு 11 இடங்கள் வழங்குவதாக அகிலேஷ் யாதவ் அறிவிப்பு..!

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே , “இந்திய கூட்டணியில் இருந்து ஜேடியு வெளியேறுவது குறித்து என்னிடம் எந்த தகவலும் இல்லை. அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. நான் நாளை டேராடூனுக்கும், அதன்பிறகு டெல்லிக்கும் பயணம் செய்கிறேன்.

முழுத் தகவல் நான் பெறுவேன் அதன் பிறகு நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்ன நடக்கும் என்று பார்ப்போம், அனைவரையும் ஒன்றிணைப்பதே எங்கள் முயற்சி, நான் மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் யாதவ், சீதாராம் யெச்சூரி ஆகியோரிடம் பேசினேன்.

நாம் இணைந்தால் நல்லதைத் தருவோம். போராடுங்கள், இந்திய கூட்டணி வெற்றி பெறும், ஜனநாயகத்தை காப்பாற்ற நினைப்பர்வர்கள் மனம் மாற மாட்டார்கள், எங்களுடன் இருப்பார்கள்” என தெரிவித்தார்.

 

 

author avatar
murugan

Leave a Comment