சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பும் ஸ்டீவ் ஸ்மித்..!!

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாடத் தடைவிதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், கனடா டி20 லீக் போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளார்.

கனடாவில் வரும் 28-ம் தேதி கனடா குளோபல் டி20 லீக் போட்டி முதல் முறையாக நடத்தப்படுகிறது. இதில் கரீபியன் ஆல் ஸ்டார்ஸ், டொராண்டோ நேஷனல்ஸ், மான்டிரியல் டைகர்ஸ், ஒட்டாவா ராயல்ஸ், வான்குவர் நைட்ஸ் மற்றும் வின்னிபெக் ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. 22 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இதில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தோடு, கிறிஸ் கெயில், ஆன்ட்ரூ ரஸல், ஷாகித் அப்ரிடி, டிவைன் பிராவோ, லசித் மலிங்கா, கிறிஸ் லின், டேரன் சாமே, டேவிட் மில்லர், சுனில் நரேன் ஆகியோர் பல்வேறு அணிகளில் இணைந்து விளையாடுகிறார்கள்.

தென் ஆப்பிரிக்காவுக்கு ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது, பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் சிக்கினார்கள்.

இதையடுத்து, அவர் 12 மாதங்கள் கிரிக்கெட் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. இவரோடு சேர்த்து டேவிட் வார்னருக்கு 12 மாதங்களும் கேமரூன் பான்கிராப்ட் 9 மாதங்களும் தடைவிதிக்கப்பட்டது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித் சிக்கி தண்டனை பெற்றதையடுத்து, இந்தியாவில் நடந்தது வரும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் பொறுப்பில் இருந்தும், அணியில் இருந்தும் ஸ்மித் நீக்கப்பட்டார்.

இதனால், கடந்த 2 மாதங்களாக கடும் மனவேதனையில் இருந்த ஸ்மித் இப்போது, மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்குத் திரும்பியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

 

author avatar
kavitha

Leave a Comment