கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த சுழற்பந்து வீச்சாளர்….!!

இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
இலங்கை அணியில் முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக சிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழும் ரங்கனா ஹெராத், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் உடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.இலங்கை அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத். 1999-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காலே மைதானத்தில் அறிமுகமான அவர் இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 430 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக இலங்கை அணியின் முதுகெலும்பாக திகழ்ந்த ஹெராத், அடுத்து வர உள்ள இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
தான் அறிமுகமான அதே காலே மைதானத்தில் கடைசி போட்டியும் இருக்க வேண்டும் என விரும்பி அவர், முதல் டெஸ்ட் போட்டியுடன் ஒய்வு பெற உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கும் ஹெராத், இன்னும் 2 விக்கெட் எடுத்தால் சர் ரிசார்ட் ஹாட்லீயை முந்தலாம்.
4 விக்கெட்டுகள் எடுத்தால் ஸ்டூவர்ட் பிராட்டை முந்தலாம், 5 விக்கெட் எடுத்தால் கபில் தேவை முந்தலாம். கடைசி டெஸ்ட் போட்டியில் அவருக்கு இத்தனை பெயரை முந்துவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. 40 வயதாகும் இவர் தான் அறிமுகமான காலே மைதானத்தில் மட்டும் இதுவரை 99 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் ஒரே மைதானத்தில் 100 விக்கெட் வீழ்த்தியவர்கள் என்ற சாதனை பட்டியலில் இணைய வாய்ப்பும் அவருக்கு உள்ளது. இந்த பட்டியலில் முத்தையா முரளிதரன் மற்றும் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் மட்டுமே உள்ளனர்.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment