காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு….சென்னை வானிலை ஆய்வு மையம்…!!

அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. தென் தமிழகத்தில் மட்டும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து உள்ளது. இந்நிலையில் குமரிக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் நாளை மழை பெய்யும்.  ஓரிரு இடங்களில் (நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூரில்) கனமழை பெய்யும். என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தாய்லாந்து, வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள மலேசியா தீபகற்ப பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மத்திய அந்தமான் கடல் பகுதியில் நிலவி வருகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்து வரும் 3 தினங்களில் மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வலுப்பெறுகிறது. வலுப்பெறும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது. புயல் மாற்றம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வருகிற 12–ந்தேதி சரியாக கணித்து சொல்ல முடியும். இது புயலாக மாறும் பட்சத்தில் தமிழகத்தில் ஓரளவுக்கு நல்ல மழை இருக்கும். கண்டிப்பாக மழை இருக்க வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment