கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் கனமழை பெய்யும்…!!

கிழக்கு திசைக்காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாக வரும் 29ம் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என -சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வடகிழக்கு பருவமழை காலங்களில் கிழக்கு திசைக்காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாக கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வரும் 24மணி நேரத்தில் மிதமான மழையும் எனவும் உள் தமிழகத்தில் ஒர் இரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.அதே போல்  நாளை கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்து வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் அதிகப்பட்சமாக 31டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment