எந்திரன் படத்தை போல ரோபோவை வைத்து இதய ஆபரேஷன் செய்து இந்தியா சாதனை!!

ரோபோ தற்போது அணைத்து துறையிலும், முத்திரை முத்திரை பதித்து வருகிறது. ஹோட்டல், தொழிற்சாலை என முக்கிய துறைகளில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது இந்த ரோபோக்களின் பங்களிப்பு மருத்துவத்துறை வரை சென்றுள்ளது.
டெலி ரோபோடிக் மற்றும் அதிவேக இன்டர்நெட் வேகம் இவற்றை பயன்படடுத்தி குஜராத்தை சேர்ந்த ஒருவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்த ஒருவர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தார். இவருக்கு சிகிச்சை அளிக்க இருந்த மருத்துவர் மருத்துவமனையிலிருந்து 32கிமீ தூரத்தில் இருந்துள்ளார்.
இவர் டெலி ரோபோடிக்கை அதிவேக இன்டெர்நெட் மூலம் இயக்கி அந்த நோயாளிக்கு இதய அறுவை செய்யப்பட்டது. இந்த சிகிச்சையை அளித்தவர், அகமதாபாத் அபெக்ஸ் இருதய நிறுவன தலைமை இதய அறுவகை சிக்சை நிபுணர் தேஜஸ் பட்டேல்.
அமெரிக்காவை அடுத்து இந்தியாவில் தான் அதிகமாக டெலி ரோபோக்கள் மருத்துவ துறையில் பயன்படுத்தபடுகின்றன.
DINASUVADU
 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment