உள்நாட்டு அரசியலுக்குள் பாகிஸ்தான் உள்பட வெளிநாடுகளை ஈடுபடுத்த வேண்டாம்- அமித்ஷா வேண்டுகோள்..!

உள்நாட்டு அரசியலுக்குள் பாகிஸ்தான் உள்பட வெளிநாடுகளை இழுக்க வேண்டாம் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தனது டுவிட்டரில் தெரிவித்து இருப்பதாவது:
“ காங்கிரஸுக்கும், பாகிஸ்தானுக்கும் சிறப்பான நுண்ணுர்வு (டெலிபதி) இருக்கிறது. திப்புசுல்தானின் பிறந்த தினத்தை காங்கிரஸ் கட்சி முன்பு விழாவாக கொண்டாடியது. அதேபோல், பாகிஸ்தான் அரசு நேற்று திப்பு சுல்தானின் நினைவு தினத்தை அனுசரித்தது. இன்று மணிசங்கர் அய்யர், ஜின்னாவை புகழ்ந்து பேசுகிறார்
குஜராத் தேர்தலானாலும் சரி, கர்நாடகத் தேர்தலானாலும் சரி, பாகிஸ்தானை ஏன் காங்கிரஸ் ஈடுபடுத்துகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை குஜராத் சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெற்றபோது, அந்தத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்கு பாகிஸ்தான் மூத்த அரசு அதிகாரிகளுடன் காங்கிரஸ் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அதேபோல், தற்போது ஜின்னா, திப்பு சுல்தான் ஆகியோர் மீது இருதரப்பும் பரஸ்பரம் அன்பு காட்டுகின்றனர். இந்திய அரசியலில் வெளிநாடுகளை ஈடுபடுத்த வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சிக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” இவ்வாறு அமித்ஷா தெரிவித்துள்ளார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment