ஈரான் அதிபருக்கு பதிலடி கொடுத்த டிரம்ப்..!

ஈரானுடனான அணு ஆற்றல் உடன்பாட்டை முறித்துக் கொண்ட அமெரிக்கா, ஈரானிடம் எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது எனப் பிற நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்தியாவில் பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்து வருகிறது. ஈரானில் இருந்து இந்தியா அதிக அளவு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. மேலும் ஈரானிலுள்ள சபஹார் துறைமுகத்தை மேம்படுத்தும் பணியிலும் இந்தியா மேற்கொண்டுள்ளது.இப்போதுஉள்ள சூழ்நிலையில் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா , ஈரானிலிருந்து கச்ச என்னை வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. எனவே, அமெரிக்காவின் எச்சரிக்கை.

இந்நிலையில் ஈரானில் பேசிய அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி, ஈரானுடனான போர் அனைத்துப் போர்களுக்கும் தொடக்கமாக அமையும் என்பதை அமெரிக்கா அறிந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாட வேண்டாம் என்றும், அத்தகைய செயல் மிகவும் வருத்தப்பட வேண்டிய நிலைக்கு ஆளாக்கிவிடும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு ரவுகானி எச்சரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வரலாற்றில் கண்டிராத பேரழிவை ஈரான் சந்திக்க நேரிடும் : டிரம்ப்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment