“இறுதி செமஸ்டர் தேர்வுகள் வரும் 24 ஆம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெறும்!”- அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் வரும் 24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர, மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதுமட்டுமின்றி, அரியர்ஸ் எழுதுவதற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள், வரும் 24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது. இந்த தேர்வுகள், 1 மணிநேரம் நடைபெறும் எனவும், மாதிரி தேர்வுகள் 19 மற்றும் 21 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது.

இந்த தேர்வில் மொத்தம் 40 கேள்விகள் கேட்கப்படும் எனவும், அதில் 30 கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தால் போதும் என தெரிவித்தனர். மேலும், தேர்வெழுதும் மாணவர்களுக்கு பிரத்யேக லாகின் ஐடி மற்றும் பாஸ்வர்டு, மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.