இன்று குட்டி’கண்ணனை’ கும்மிட்டால் குறையொன்றுமில்லை..!!வாழ்வில்…!

இன்று கிருஷ்ண பிறந்த தினம் மாய கிருஷ்ணன் நம்மை மாயை என்னும் ஆசையிலிருந்து பிரித்து அவன்  பாதையில் நாம் செல்ல நமக்காக கிருஷ்ண அவதாரத்தை காரணமாக கொண்டு நம்மை நல்வழிப்படுத்த அந்த பாண்டுரங்கன் அவதரித்த நன்நாளே கிருஷ்ண ஜெயந்தி.அஸ்டமி திதியில் நள்ளிரவில் கிருஷ்ண அவதாரம் நடந்தது.நள்ளிரவில் பிறந்து இப்பூவுலகிற்கு வெளிச்சம் எனும் ஒளியை தன்னுள் வைத்து கொண்டு பிறந்தவன் கண்ணன்.

Photo

எப்படி உடனிலிலுள் இருக்கும் உயிரை யாராவது கண்டதுண்டா இல்லை ஆனால் அவ்வுயிராலே நாம் வாழ்கிறோம்.ஏன் நம் உடலை  மருத்துவம் பார்க்கும் மருத்துவருக்கு தெரியுமா? உடலில் உயிர் எங்கு இருக்கிறது என்று தெரியாது. உடம்பினுள் இருக்கும் இந்த ஆத்மா  பரமாத்மாவை தேடி செல்ல உதவும் இடம் தான் கோவில் அந்த கோவிலினுள் நுழைந்த ஒருவன் தன்னுள் உள்ள பரமாத்மாவை அறிகிறான். எத்தனை யுகங்கள் கடந்தாலும் இறைவனின் அருளை அவர் அருளாலே அறிய முடியும்.

#Jaishrikrishna

அத்தகைய அருள் மழை பொழியும் கண்ணனை இன்று வணங்கினால் போதுமே குறையெல்லாம் குனிந்து படி செல்லுமே நம்மை விட்டு ஏனென்றால் நிமிர்ந்து கூட நம்மை பார்க்கா வண்ணம் அந்த நீலவண்ணன் அருள் புரிவார்.இந்த கண்ணனை வீட்டிலே வணங்கலாம் அப்படி வணங்கும் போது கண்ணன் கருணை உள்ளத்தோடு நம்மை நோக்கி வருவார் என்பது ஐதீகம்.அன்று அவருக்கு பிடித்தவற்றை  படைத்து வழிபடவேண்டும்.

கிருஷ்ணனை சாதரணமாக கருதிவிடாதீர்கள் கருநீல கண்ணன் குறும்புகளில் கூடினவன் என்று தான் சொல்லவேண்டும்.குறும்பு இருந்தாலும் தன்னை கும்மிட்டவருக்கு குறை என்ற ஒன்றை இல்லாமல் செய்பவன் கிருஷ்ணன்.குட்டி கிருஷ்ணனை வணங்கினால் இன்று நம்முடைய துன்பங்கள் எல்லாம் தூரமாக சென்றுவிடும்.அவரின் சிந்தனையால் செயல்கள் யாவும் நிகழ்கிறது.

கிருஷ்ண துதி பாடும் குழந்தைக்கு அறிவு அளிப்பவன்,இன்று அவனை நினைத்து வணங்கும் தம்பதிகளுக்கு குட்டி குழந்தையை பரிசாக அவர்களுக்கு அளிப்பவன்.வீட்டில் லட்சுமி கடாஷ்சத்தை கொடுப்பவன்.அவனை எண்ணி இன்று வழிபட்டால் எண்ணியதை எட்டி தருவான் கண்ணன் ஆகையால் இன்று நாம் எல்லோரும் அந்த குறும்பனை வணங்கி நம் குறைகளை களைவோமாக..! அந்த பாண்டு ரங்கனின் பாதம் பணிவோமாக..! நலம்…

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment