இந்தியா சார்பில் பாகிஸ்தானிடம் அதிருப்தி தெரிவிக்காப்பட்டது : வெளியுறவுத்துறை அமைச்சர்

பாக்கிஸ்தானில் சிறைபிடிக்கபட்ட இந்திய உளவாளி குல்பூசன் சதாவை பார்க்க சென்ற அவரது மனைவியார் உள்ளே அனுமதிக்கப்படும் போது கடும் சோதனை செய்யப்பட்டு அவரது தாலியை கழட்ட சொல்லியும், அவரது காலனிகளில் சந்தேகப்படும் படி உலோக காலனி உள்ளதாகவும் கூறியது.

இதற்க்கு இந்திய அரசு சார்பில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து, இந்தய வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்புஷன் சதாவை விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.’ என கூறினார்.

மேலும், அவர்கூறுகையில், ‘குல்புஷன் குடும்பத்திற்கு உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது. குல்புஷனின் மனைவி மற்றும் தயாரிடம் நடந்து கொண்ட விதம் பற்றி பாகிஸ்தானிடம் அதிருப்தி தெரிவித்துள்ளது.’ என்றும் கூறினார்.

source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment