இந்தியாவின் சாதனை இதோ…!!

இந்தோனேஷியாவில் ஆசிய போட்டிகள் நடைபெற்று வருகின்றது.இப்போட்டிகள் தற்போது முடியக்கூடிய இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இதில் இந்தியா எப்போதும் இல்லாத அளவுக்கு பதக்கங்களை வெற்றுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.குறிப்பாக இந்தியா  60க்கும் மேலான பதக்கங்களை  வென்று  இந்தியா அசத்திஉள்ளது.

இந்நிலையில் ஆசிய போட்டிகளில் தங்கம் பெற்ற பெருமை சேர்த்த இந்திய வீரர்கள் பட்டியல் இதோ :

மல்யுத்ததில் 65 கிலோ எடைப்பிரிவில் ஹரியானாவை சேர்ந்த பஜ்ரங் பூனியா தங்கம் வென்றார்.

பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவில் ஹரியானாவை  சேர்ந்த வினேஷ் போகத் தங்கம் வென்று அசத்தினார்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த பதினாறு வயதான சவுரப் சவுத்ரி 10 மீட்டர் துப்பாக்கிசுடுதல் பிரிவில் தங்கம் வென்றார்.

மகாராஷ்டிராவை சேர்ந்த ரஹி சர்னோபத் 25 மீட்டர் துப்பாக்கிசுடுதல் பிரிவில் தங்கம் வென்றார்.

ஆசியப்போட்டிகளில்  படக்கோட்டுதல் பிரிவில் ஸ்வரன் சிங், தட்டு பொக்கனல், ஓம் பிரகாஷ், சுக்மித் சிங்  கூட்டணி தங்கம் வென்றது.

ஆடவருக்கான இரட்டையர் டென்னிஸ் பிரிவில் ரோஹன் போபண்ணா – திவிஜ் சரன்  இணை தங்கம் வென்றது.

பஞ்சாபை சேர்ந்த தஜிந்தர் பால் சிங் குண்டு எரிதல் பிரிவில் 20.75மீட்டருக்கு குண்டு எரிந்து தங்கம் வென்றார்.

88 மீட்டருக்கு மேல் ஈட்டி எரிந்து தங்கம் வென்றார் 20 வயதான நீரஜ் சோப்ரா.
800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மஞ்சித் சிங் தங்கம் வென்று அசத்தல்.

பஞ்சாபை சேர்ந்த அர்பிந்தர் சிங் ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் 16.77 மீட்டர் வரை தாண்டி தங்கம் வென்றார்.

மகளிர் ஹெப்டத்லான் பிரிவில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஸ்வப்னா பர்மன் தங்கம் வென்றார். ஆசிய போட்டிகளில் ஹெப்டத்லான் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை.

கேரளாவை சேர்ந்த ஜின்சன் ஜான்சன் 1500 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் தங்கம் வென்றார். 56 ஆண்டுகள் கழித்து இந்த பிரிவில் இந்தியர் ஒருவர் தங்கம் வென்றுள்ளார்.

மகளிருக்கான 4 * 400 மீட்டர் ரிலே ப்ரிவில் ஹீமா தாஸ் , பூவம்மா, சரிதாபென், விஸ்வமயா கூட்டணி தங்கம் வென்று அசத்தியது .

49 எடைப்பிரிவில் ராணுவத்தில் பணியாற்றி வரும் அமித் பங்கல் தங்கம் வென்றார்.
பிரிட்ஜ் போட்டியின் இரட்டையர் பிரிவில் பிரனாப் பர்தன், ஷிப்நாத் சர்கார் இணை தங்கம் வென்றது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment