இட்லி சாப்பிட்டு இருப்பிங்க…!! கேழ்வரகு சேமியா இட்லி சாப்பிட்டு இருக்கீங்களா…?

இட்லி நமது நாட்டின் தேசிய உணவாகவே மாறிவிட்டது என்று கூட சொல்லலாம். ஏனென்றால் இட்லியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இட்லியை விரும்பி சாப்பிடுவதுண்டு. இப்பொது நாம் கேழ்வரகு சேமியா இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

  • கேழ்வரகு சேமியா பாக்கெட் – 500 கிராம்
  • உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :

சேமியா இட்லி செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு சேமியாவைப் போட்டு, இரண்டு முறை நீர் ஊற்றி அலசி விட்டு, அதில் சேமியா மூழ்கும் அளவு நீர் ஊற்றி, அதில் சிறிது உப்பு சேர்த்து நன்றாக ஊற்ற வைக்க வேண்டும். சேமியா ஊறியதும் சாதம் வடிப்பதுபோல நீரை வடிகட்டி விட வேண்டும்.

இட்லி பாத்திரத்தில் உள்ள இட்லி தட்டில் சேமியாவை கையால் கொஞ்சம் கொஞ்சமாக அள்ளி ஒவ்வொரு குழியிலும் வைத்து வேக வைத்து எடுக்க வேண்டும். இப்பொது நமக்கு தேவையான கேழ்வரகு சேமியா இட்லி ரெடி.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment