ஆரவாரம்…ஆட்டத்துடன் நிறைவடைந்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…72 பேர் காயம்

  • ஆரவாரம் கரகோஷத்திற்கு இடையே நிறைவுபெற்றது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
  • மாடு முட்டியதில் 10 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி 72 பேர் காயம்
தமிழர் திருநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அதனின் மற்றொரு கட்டமான ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் இன்றும் நாளை பாலமேட்டிலும் வருகின்ற 17ந்தேதி உலகபிரசித்தி பெற்ற அலங்காநல்லூரிலும் களைக்கட்டுகிறது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்க திண்டுக்கல், தேனி, கம்பம் மற்றும் திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டப் பகுதிகளில் இருந்து வருகின்ற  காளைகள் அனைத்தும் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்ட பிறகே வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி அமைக்கப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் அவர்களின் தலைமையிலான குழுவானது இன்று காலை 8 மணிக்கு போட்டியை தொடங்கி வைத்தது.அதன்படி 700 காளைகள் பதிவுச்செய்யப்பட்ட நிலையில் பலச் சுற்றுகளாக நடத்தப்பட்டது.
Image
இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் சரியாக காலை 8 மணிக்கு தொடங்கி ஜல்லிக்கட்டு போட்டியானது  மாலை 4 மணிவரை  நடைபெற இருந்தது.ஆனால் 130 காளைகள் 4 மணிவரை அவிழ்க்கப்படாததால் கூடுதலாக அரை மணிநேரத்தை நீட்டித்து  காளைகள் பங்கேற்க ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பு குழு அனுமதி வழங்கியது.
Image
அனுமதியைத் தொடர்ந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. கரக்கோஷத்திற்கு நடுவே மாட்டானது தனது திமிலை தொடவிடாமால் மிரட்டி அசத்தியது.இதற்கு சளைக்காமல் மாடு பிடி வீரர்களும் மாட்டினை பிடிக்க முயன்ற காட்சிகள் எல்லாம் சொல்வதற்கு வார்த்தைகள் இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4.30 மணியுடன் நிறைவு பெற்றது.ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் படுகாயமடைந்த 10 பேர் மதுரை அரசு  ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும்  போட்டியின் போது காளைகள் முட்டியதில் 72 பேர் காயம் அடைந்துள்ளனர். வாடிவாசலில் இருந்து வெளிவரும் காளை கூட்டத்தனர் மத்தியில் பாய்ந்தால் காயமடைந்தவர்களின்  எண்ணிக்கை  இந்தாண்டு அதிகரித்தாக கூறப்படுகிறது.
author avatar
kavitha