அரசியல் கட்சிகளின் பேனரை அகற்ற முடியலனா..!பதவிய ராஜினாமா..செய்துவிட்டு..! அதே கட்சியில் சேர்ந்து விடுங்கள்..!உயர்நீதி மன்றம் கடும் கண்டனம்..!!

தமிகத்தில் தற்போது பரவி வரும் கலச்சாரமாக பேனர் உருவாகியுள்ளது.சாலைகளை மறித்து பேனர் வைப்பது,போன்ற மக்களுக்கு இடையூறு தரும் வகையில் பேனர் வைக்கப்படுதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்குகள் இன்று விசாரனைக்கு வந்தது.இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள்  கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
Related image
பேனர் வைப்பது குறித்து மாநகராட்சியிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.பின்னர் நீதிபதிகள் பேனர் வைக்கின்ற எந்த அரசியல் கட்சியினர் மீதும் மாநகராட்சியால் நடவடிக்கை எடுக்க முடிய வில்லை அவ்வாறு இருந்தாலும் பேனர் வைக்கப்படுகின்ற போது ஒவ்வொரு பேனரிலும் யார் விண்ணப்பிக்கிறார்கள், அதை யார் பிரிண்ட் செய்கிறார்கள்.
Image result for பேனர்
மேலும் எந்த தேதியில் அனுமதி வழங்கப்பட்டுதுள்ளது என்ற விவரங்கள் எல்லாம் இடம்பெற்றிருக்க வேண்டும் இந்த விதிமுறைகள் எல்லாம் பின்பற்றாத நிறுவனங்கள் மீது கூட ஏன் நடவடிக்கை இல்லை என கேள்வி எழுப்பினர்.மேலும் கண்டனங்களை தெரிவித்த நீதிபதிகள் விதிமீறல் டிஜிட்டல் பேனர்களை அகற்ற வேண்டும் போது அது சுற்றுப்புறச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் அகற்ற வேண்டும்.
Image result for பேனர் கட்சி
இதற்கு முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை என்று தெரிவித்த நீதிபதிகள் விதிமீறி வைக்கப்படுகின்ற பேனர்கள் குறித்த விழிப்புணர்வு அதிகாரிகளுக்கு உள்ளதா..? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அரசியல் கட்சிகளின் விதிமீறல் பேனர்கள் மீது உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் தங்களது பதவியை ராஜினாமா செய்யுங்கள்,  பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதே கட்சியில் சேர்ந்து விடுங்கள் என்று அரசு அதிகாரிகள் மீது உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களது அதிருப்தி தெரிவித்தனர்.மேலும் இது தொடர்பான விரிவான விளக்கத்தை நாளை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தர பிறப்பித்தனர்.

author avatar
kavitha

Leave a Comment