அமெரிக்க சிஐஏ இயக்குனர் -வடகொரிய அதிபர் ரகசிய சந்திப்பு !

அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ இயக்குநர் மைக் பாம்பியோ ,வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரிய அதிபரும், அமெரிக்க அதிபரும் வரும் மே மாதத்தில் இருநாடுகளுக்கும் பொதுவான ஓரிடத்தில் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ இயக்குநர் மைக் போம்பியோ, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை நேரில் சந்தித்துள்ளார். இதனிடையே, வடகொரிய அதிபரை சந்திப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், உலக அளவிலான பிரச்சனையை தீர்க்க இந்த பேச்சுவார்த்தை நல்ல வாய்ப்பு என கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment