அத்வானிக்கு மோடியை விட காங்கிரஸ் கட்சி அதிக மரியாதை தந்துள்ளது – ராகுல் காந்தி

மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

அனைத்து தரப்பு மக்களை மும்பை நகரம் உள்வாங்கி கொண்டு செயல்படுவதுபோல் காங்கிரஸ் கட்சியும் அனைத்து பிரிவுகளை சேர்ந்த மக்களையும் ஒன்றிணைத்து, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க செயல்பட்டு வருவதாக ராகுல் தெரிவித்தார்.

கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து வந்த ஒரு மூத்த அரசியல்வாதி, இந்த நாட்டை பாதுகாக்க காங்கிரசால்தான் முடியும் என 50 ஆண்டுகளுக்கு பிறகு உணர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் சித்தாந்தத்தை காங்கிரசால் மட்டுமே தோற்கடிக்க முடியும்.

நாங்கள் வாஜ்பாயை எதிர்த்து போட்டியிட்டதுண்டு. ஆனால், தற்போது அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் காங்கிரசின் போர்வீரன் என்ற முறையில் அவரை சந்திப்பதற்கு முன்னுரிமை தந்து வாஜ்பாயை நான் பார்க்கச் சென்றேன். அவர் இந்த நாட்டுக்காக பணியாற்றியவர், பிரதமராக இருந்தவர் என்பதால் நாங்கள் அவரை மதிக்கிறோம். இதுதான் எங்கள் கலாசாரம்.

மோடியின் குருவாக இருந்தவர் அத்வானி. ஆனால், சில நிகழ்ச்சிகளில் தனது குருவான அத்வானியைகூட பிரதமர் மோடி மரியாதை அளிக்காததை நான் பார்த்திருக்கிறேன். மோடியைவிட அத்வானிக்கு காங்கிரஸ் கட்சி அதிக மரியாதை தந்து வந்துள்ளது. இன்று நான் அத்வானிக்காக வேதனைப்படுகிறேன்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment