அதிரசம் சாப்பிட்டு இருப்பிங்க…!! கேழ்வரகு அதிரசம் சாப்பிட்டு இருக்கீங்களா…?

அதிரசம் என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவதுண்டு. பண்டிகை காலங்களில் பாலகாரங்களில் முதன்மையான பலகாரமாக இருப்பது அதிரசம் தான். கேழ்வரகு அதிரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

  • ராகி மாவு – 3 கப்
  • உருண்டை வெள்ளம் – 2 கப்
  • நெய் – கால் கப்
  • ஏலக்காய் தூள் – 1டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

உருண்டை வெல்லத்தை மெழுகு பதில் பாகு காய்ச்சி வைத்து கொள்ள வேண்டும். பின் இந்த பாக்க கேழ்வரகு மாவில் ஊற்றி, ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும். மாவு இளஞ்சூடாக இருக்கும் பொது 2 கரண்டி நெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மாவு ஆறியதும் அதிரசங்களாக தட்டி எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்க வேண்டும்.

இப்போது சூடான, சுவையான கேழ்வரகு அதிரசம் ரெடி.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment