அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் : ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மனு.!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓ.பன்னீர்செலவமும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

நீதிமன்ற உத்தரவு :

இந்த அதிமுக பொதுச்செயலர் தேர்தல் விதிகள் மீர் நடத்தப்படுகிறது இதற்கு தடை கேட்டு ஓபிஎஸ் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த  உயர்நீதிமன்ற நீதிபதி,  ஏற்கனவே பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால், தற்போது தேர்தல் நடத்திக்கொள்ளலாம். ஆனால், விசாரணை முடிந்த பிறகு தான் முடிவு அறிவிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கு விசாரணை : 

இதனை அடுத்து இந்த வழக்கு விசாரணை வரும் 22ஆம் தேதி நடைபெற்று 24ஆம் தேதி தீர்ப்பு வழங்க பட உள்ளது. இதற்கிடையில் இந்த பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வமும் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் :

ஏற்கனவே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஸ் செய்துள்ள நிலையில் இந்த மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment