அஞ்சலகம் முன் தீப்பந்தங்களை கையில் ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம்!

கும்பகோணம்:

கமலேஷ் சந்திரா கமிட்டியின் அறிக்கையை மத்திய அரசு உடனே அமல்படுத்த வேண்டும். தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைப்படி அனைத்து ஊழியர்களுக்கும் 2.57 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும். பெண் ஊழியர்களுக்கு 6 மாத பேறுகால விடுப்பு வழங்க வேண்டும். அனைத்து ஊழியர்களும் ஓய்வுபெறும்போது பணிக்கொடை தொகை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற கோரி மே 22ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளனர். இதில் 12வது நாளான நேற்று கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன் தீப்பந்தங்களை கையில் ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment