அஜித் ரசிகர்களை கடுப்பாகிய பிரபல நடிகை….!!!

  • அஜித் ரசிகர்களை கடுப்பாகிய பிரபல நடிகை.
  • சிவகார்த்திகேயனை ரஜினி உடன் ஒப்பிட்டு கூறியுள்ளார்.

நடிகை இஷா கோபிகர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.இவர் விஜயகாந்துக்கு ஜோடியாக நரசிம்ம படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது இவர் சிவகார்த்திக்கேயன் நடிக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், அண்மையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு இவர் அளித்துள்ளார்.

இந்த பேட்டியில் அவர் கூறியதாவது, சிவகார்த்திகேயனைப் பார்க்கும்போது எனக்கு ரஜினி தான் நினைவுக்கு வருகிறார் என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் அஜித்தைப்பற்றி பேசுகையில்,`எனக்கு அஜித்தைப் பிடிக்கும். ஆனால் அவர் இன்னும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறாரா  என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

இவரது, இந்த பேச்சு அஜித் ரசிகர்களை கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், சிவகார்த்திகேயனை ரஜினி உடன் ஒப்பிட்டு கூறியிருப்பதும், ரஜினி ரசிகர்களை கோபத்திற்கு ஆளாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment