பிக் பாஸ் 2 சீசனில் வெற்றியாளர் இவரா..? ரூபாய் 50,00,000_யை தட்டிச் சென்றார்..!!

பிக் பாஸ்2 நிகழ்ச்சியின் இறுதி போட்டி வெற்றியாளராக ரித்விக்கா அறிவிக்கப்பட்டு ரூபாய் 50,00,000 பெற்று சென்றார்.

கடந்த சில மாதங்களாக  வீடுகளில் அனைவராலும் பேசப்படும் ஓன்று விஜய் டிவி யில் தொடங்கிய பிக் பாஸ்  நிகழ்ச்சி.இதன்  முதல் சீசன் நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாவது சீசன் கடந்த  ஜுன் 17ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்று விளையாடி வந்தனர்.

கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் பிக் பாஸ் 2_வின்  இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது.இந்த இறுதி போட்டிக்காக 3 கோடி ஓட்டுக்கள் பதிவாகியது.பிக்பாஸ்2 நிகழ்ச்சியின் இறுதிப் பகுதி ஒளிபரப்பாகும் முன் வெளியேறிய போட்டியாளர்கள்  அனைவரும் கலந்து கொண்ட தொடக்க நிகழ்ச்சி பிரமாண்ட மேடையில் பல கலைநிகழ்ச்சிகளோடு நடைபெற்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இறுதி போட்டியின் வெற்றியாளர் யாராக இருக்கும் என்ற சூழலில் பிக் பாஸ்1 நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரோவ் பிக்பாஸ் 2 சீசனின் வீட்டுக்குள் சென்று மூன்றாவது இடம் ( இரண்டாவது ரன்னரை ) போட்டியாளரை வெளியே அழைத்து வந்தார்.

மூன்றாவது இடம் :

இரண்டாவது ரன்னராக அப்_பாக விஜயலட்சுமி அறிவிக்கப்பட்டார். அவரை பிக் பாஸ்1 நிகழ்ச்சியின் வெற்றியாளர்  ஆரோவ் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று, மேடைக்கு அழைத்து வந்தார்.

ரன்னர்-அப் :

முதல் ரன்னர் அப்-பாக ஐஸ்வர்யா அறிவிக்கப்பட்டார். பிக்பாஸ் வீட்டை விட்டுக் கிளம்பும்போது கண்கலங்கினர். அவரை கமல்ஹாசன் மேடைக்கு அழைத்து வந்தார்.

டைட்டில் வின்னர் :

இறுதியாக ஐஸ்வர்யா_வும் ரித்விக்கா_ வும்  பிக்பாஸ் 2 சீசனில் வீட்டுக்குள் இருந்தனர்.அதில் வெற்றியாளர்கள் யாராக இருக்கும் என்ற சூழலில் பிக்பாஸ் 2 சீசனின் வெற்றியாளர்களாக மக்களின் வாக்குகளின் அடிப்படையில் ரித்விக்கா வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரசிகர்கள் ஆரவாரம் :

பிக்பாஸ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதும் ரித்விக்கா உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ட்ராஃபியை பெற்றுக்கொண்டார். வெற்றியாளர் ரித்விக்கா என அறிவிக்கப்பட்டதும் பார்வையாளர்கள் அனைவரும் ஆரவாரத்தோடு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

DINASUVADU 

Leave a Comment