இளைஞர்கள் கொரோனாவுக்கு மறைவானவர்கள் அல்ல – எச்சரிக்கும் WHO!

இளைஞர்களையும் கொரோனா தாக்கலாம் அவர்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் கூறியுள்ளார்.

கொரானா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அதுவும் தொடக்கத்தில் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கும் தான் கொரோனா வைரஸின் தாக்கம் பரவுகிறது என கூறப்பட்டதால் இளைஞர்கள் மிகவும் ஆரவாரமாக அவர்கள் ஆசைப்பட்டபடி எல்லாம் வெளியில் சுற்றி திரிந்தனர். ஆனால், தற்போது இளைஞர்களுக்கும் பாதிப்பு அதிகளவில் இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து இளைஞர்கள் தாங்களாகவே வெளியில் சென்று தங்களது பாதுகாப்பை குறைத்துக்கொள்வது தான் காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ்  கூறுகையில், நாங்கள் ஏற்கனவே கூறியிருக்கிறோம். மீண்டும் கூறுகிறோம், இளைஞர்கள் மற்றும் கொரோனாவை வெல்லக்கூடியவர்கள் அல்ல. கொரோனா எல்லோரையும் தாக்கக் கூடியது. எனவே, முதியவர்கள் மற்றும் குழந்தைகளைப் போல இளைஞர்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பெட்ரோஸ் பரிந்துரைத்துள்ளார்.

author avatar
Rebekal