‘Corona To Covid-19’ பெயரை மாற்றிய உலக சுகாதாரத்துறை.! காரணம் என்ன.?

  • சீனாவில் கொரோனா வைரசால் 1,113 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,653-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைப் பலி கொண்ட கொரோனோ வைரஸ்சின் பெயர் மாற்றப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

சீனாவில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் அச்சிறுத்தி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் வைரசால் பாதிக்கப்பட்டு கொத்துக்கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். சீனாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று (புதன்) காலை வரை 1,113-ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,653-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம் 4,740 பேர் இந்த வைரஸில் இருந்து குணமைடைந்து வீடு திருப்பியுள்ளார்கள் என தகவல் வந்துள்ளது. இதனிடையே, 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைப் பலி கொண்ட கொரோனோ வைரஸ்சின் பெயர் மாற்றப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

'கொரோனா To Covid-19' பெயரை மாற்றிய உலக சுகாதாரத்துறை.! காரணம் என்ன.?

கொரோனா என்ற லத்தீன் சொல்லுக்கு மலர் மகுடம் என்று அர்த்தம் என்பதால், மலர் மகுடம் போன்ற தோற்றம் கொண்ட இந்த வைரசுக்கு கொரோனா என பெயர் சூட்டப்பட்டது. இதனால் கொரோனா என்ற பெயரை பயன்படுத்தி வரும் மக்களும், பல நிறுவனங்களும் வைரஸின் பெயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதில் குறிப்பாக மெக்சிகோ நாட்டில் உள்ள பிரபல பியர் தயாரிப்பு நிறுவனமான ‘கொரோனா பியர்’  பல பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். எனவே, கொரோனா வைரஸ்சின் பெயரை மாற்றினால் சுமார் ரூ.100 கோடி தருவதாகவும் அந்நிறுவனம் அறிவித்தது.

இதுபோன்று பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளையும் ஏற்ற உலக சுகாதார நிறுவனம், நேற்று( செவ்வாய்க்கிழமை) கொரோனா வைரஸ்சின் பெயரை மாற்றியுள்ளது. அதற்கு கொவிட்-19 (Covid-19) என்று தற்போது பெயர் சூட்டப்பட்டது. கொரோனா, வைரஸ், டிசீஸ் (disease) – ஆகிய 3 சொற்களில் இருந்து இந்தப் புதிய வார்த்தை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 19 என்பது, வைரஸ் பரவத் தொடங்கிய ஆண்டான 2019-ஐ குறிக்கின்றது. வைரஸின் இந்த புதிய பெயர் எதையும் குறிப்பிடாத வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்