இன்று உலக சுற்றுசூழல் தினம் !

ஐக்கிய நாடுகள் சபையால், சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், ஜூன்-5ம் தேதி உலக சுற்றுசூழல் தினம் கொண்டாடப்படுகிறது. நாம் அனைவருக்கும் சுற்றுசூழலை பாதுகாப்பதில் மிக முக்கியமான கடமையாக உள்ளது.

இயற்கை நமக்கு இறைவன் கொடுத்த வரம். அதை அழிப்பதற்கு நமக்கு எந்த அதிகாரமும் கொடுக்கப்படவில்லை. நாம் நம்முடைய சுய தேவைகளுக்காக இயற்கையை அழிப்பது, இறுதியில் அதுவே நமக்கு கண்ணியாக மாறி விடுகிறது.
நாம் இயற்கையை என்று அழிக்க துணிந்தோமோ, அன்றே நமது உடல் ஆரோக்கியமும், சுற்றுசூழல் பாதுகாப்பும் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த உலகில் உள்ள ஐந்தறிவு உயிரினங்களுக்கு உறைவிடம் கொடுக்க வேண்டியது நமது கடமை. ஆனால், அவை கஷ்டப்பட்டு கட்டி வைத்திருக்கும் கூடுகளையும் அவற்றின் இருப்பிடமான காடுகளையும் மனிதன் அழிக்க துணிந்துள்ளான்.

வரும்காலங்களிலும் இன்னும் நாம் இயற்கையை அழிக்க துணிந்தோமானால், இந்த பூமியை பார்ப்பதில் நாம் தான் கடைசி சந்ததியினர். எனவே உலக நாடுகளுக்கே பெரும் சவாலான பிரச்சனையாக உருவெடுத்துள்ள சுற்றுசூழல் பிரச்சனைகளில், நாம் தலையிட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுற்றுசூழலை பாதுகாக்க வழிவகுப்போம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.