தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறக்கலாம்..? முதல்வர் ஆலோசனை.!

செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை 

கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டது. மேலும் அனைத்து விதமான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட  10-ம் வகுப்பு தேர்வுகள் வருகின்ற ஜூன் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும், மூடப்பட்ட பள்ளிகள் எப்போது..? திறக்கப்பட உள்ளது என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையடுத்து,  தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்தும், 10-ம் வகுப்பு தேர்வு மையங்கள் அமைப்பது குறித்தும் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

 

author avatar
Dinasuvadu desk