கொரோனா எதிரொலி: இனி 15 வினாடிகளுக்கு மட்டும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்.!

வாட்ஸ்அப் பயனாளர்கள் இனி 15 விநாடிகளுக்கு மட்டுமே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்க முடியும்.

உலக நாடுகள் கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் சூழல் உள்ளது. இதனால் பெரும்பான்மையான நேரத்தை மக்கள் தங்களது ஸ்மார்ட் போன்களில்தான் செலவழிக்கின்றனர். 

இந்த நிலையில், ஊரடங்கு அமலில் வந்ததுக்கு பின்னர் வாட்ஸ்அப் பயன்பாடு 40 சதவிகிதம் அதிகரித்துள்ளதாம். மேலும் இணைய தேவை அதிகப்படியாக பயன்படுத்தப்படுவதால் பல டெக் நிறுவனங்களும் வீடியோ தரத்தைக் குறைப்பதாக அறிவித்தன. அந்த வகையில் பேஸ்புக், நெட்ப்ளிக்ஸ், இன்ஸ்டாகிராம் என அத்தனைத் தளங்களிலும் ஹெச்டி வீடியோ தரம் நிறுத்தப்பட்டது.

தற்போது வாட்ஸ்அப் செயலியிலும் 30 விநாடிகளுக்கு என இருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வசதி தற்போது 15 விநாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஊரடங்குக்கு பின்னர் அதிகமாக பயன்படுத்துவதால் வாட்ஸ் அப் சேவை பாதிப்பு ஏற்படக்கூடாது என்று இந்த முடிவு எடுத்துள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சம் நீங்கிய பின்னர் நிச்சயமாக 30 விநாடிகள் முறை அமல்படுத்தப்படும் என்றும் வாட்ஸ்அப் குறிப்பிட்டுள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்