ரஜினிகாந்த் கூறியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை-திருமாவளவன்

மோடி-அமித்ஷாவை கிருஷ்ணன்-அர்ஜுனனுக்கு  இணையாக  ரஜினிகாந்த் கூறியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை என்று எம்.பி திருமாவளவன் கூறியுள்ளார்.
நேற்று சென்னையில் துணை குடியரசு தலைவராக வெங்கையா நாயுடு 2 ஆண்டுகளில் செய்த  ஆவணப்படுத்தும் வகையில்  “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” என்ற  புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உள்துறை அமைச்சர் அமித் ஷா,பிரகாஷ் ஜவடேகர்,தமிழக ஆளுநர்,முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.புத்தகத்தை  உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்.
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணனும் , அர்ஜூனனும் போன்றவர்கள்.இதில் யார் கிருஷ்ணன் ?யார் அர்ஜுனன் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று  பேசினார்.
இந்த நிலையில் திருச்செந்தூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்த சிதம்பரம் தொகுதி எம்.பி திருமாவளவன் ரஜினிகாந்த் கூறியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில் ,“மோடி-அமித்ஷாவை கிருஷ்ணன்-அர்ஜுனனுக்கு  இணையாக  ரஜினிகாந்த் கூறியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ரஜினிகாந்திடம் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது. எனவே ரஜினியின் கருத்தில் எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று  கூறினார்.