நாம் சொல்லி ரஜினிகாந்த்துக்கு தெரியவேண்டியதில்லை-அபுபக்கர் பேட்டி

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நாம் சொல்லி ரஜினிகாந்த்துக்கு தெரியவேண்டியதில்லை என்று தமிழக ஹஜ் கமிட்டித் தலைவர் அபூபக்கர் தெரிவித்துள்ளார். 
சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்துடன் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் நேரில் சந்தித்தார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  ரஜினி சாருக்கு யாரும்  குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விளக்கம் கொடுக்கத் தேவையில்லை.அவர் லெஜெண்ட் .(He is a legend).குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அவர் தெளிவாக தெரிந்து வைத்துள்ளார். இஸ்லாமியர்களுக்கு பிரச்னை என்றால் குரல் கொடுப்பேன் என்று தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்தேன் என்று தெரிவித்துள்ளார்.