வைரல் வீடியோ :நடனத்தை தொடர்ந்து பாடலிலும் பொளந்து கட்டிய தல மகள்.!

வைரல் வீடியோ :நடனத்தை தொடர்ந்து பாடலிலும் பொளந்து கட்டிய தல மகள்.!

  • அஜித் மகள் அனோஷ்கா விளையாட்டு மற்றும் நடனத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்.
  • தற்போது  அனோஷ்கா தனது பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஆங்கில பாடல் பாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அஜித். இவருக்கு தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அஜித்தின் ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் கவனித்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் அவரது குழந்தைகளையும் ரசிகர்கள் விட்டு வைப்பதில்லை அவ்வப்போது அவரது குழந்தையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுதல்  போன்றவற்றையும் ரசிகர்கள் செய்து வருகின்றன. சமீபத்தில் அஜித் மகன் ஆத்விக் தனது தாயுடன் ஷாப்பிங் சென்ற ஷாப்பிங் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது .இதை தொடர்ந்து தற்போது அஜித் மகள் அனோஷ்கா தனது பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஆங்கில பாடல் பாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஒருவர் 2019ஆம் ஆண்டு அஜித்தின் நினைவுகள் என்ற ஹேஸ்டேக்குடன் பகிர்ந்துள்ளார்.ஏற்கனவே அனோஷ்கா விளையாட்டு மற்றும் நடனத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது பாடல்  பாடியும் அசத்தி உள்ளார்.