இந்தியாவுடன் எல்லையில் அத்துமீறும் சீனா... அமெரிக்க எம்பி ஆவேச பேச்சு...

இந்தியாவுடன் எல்லையில் அத்துமீறும் சீனா... அமெரிக்க எம்பி ஆவேச பேச்சு...

  • usa |
  • Edited by kavi |
  • 2020-09-21 08:24:26
இந்தியா தனது எல்லை பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்த மேற்கொள்ளும் கட்டமைப்பு பணிகளை தடுத்து நிறுத்துவதற்காகவே, சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபடுகிறது,"" என, அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:- சீனாவுடனான எல்லை பகுதியில் இந்தியா தனது கண்காணிப்பை பலப்படுத்துவதற்காக, இந்திய அரசு, பல்வேறு கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகளால், தங்கள் ஆதிக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் என சீனா கருதுகிறது. இதனால், இந்தியாவின் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, எல்லை பகுதியில் சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுகிறது. சீன ராணுவம், தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே கட்டமைப்பு பணிகளை முடித்து விட்டது. ஆனால், இந்திய ராணுவம் கட்டமைப்பு பணிகளை துவக்குவதற்கு, சீனா எதிர்ப்பு தெரிவித்து, தாக்குதலில் ஈடுபடுகிறது. நல்ல நட்புறவுடன் கூடிய அண்டை நாடாக செயல்பட சீனா மறுக்கிறது. சீனாவுக்கு எதிராக, அதன் மற்ற அண்டை நாடுகள் எல்லாம் ஓரணியில் திரளுவதற்கு இது தான் சரியான நேரம் என்று ஆவேசமாக கூறினார்.

Latest Posts

#7.5%-Reservation: இதற்கு ஏன் 45 நாட்கள் தாமதம் ? ஏன் கிடப்பில் போட்டார்கள் ? - மு.க.ஸ்டாலின் டீவீட்
ஜம்மு-காஷ்மீர் பயகங்கரவாத தாக்குதலில் பாஜாகவினர் மூவர் பலி
#IPL2020 : கெய்க்வாட் அரைசதம் ! கடைசி பந்தில் சென்னை அணி வெற்றி
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு -அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
நிதிஷ் ராணா அதிரடி.. 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ள சென்னை!
டாஸ் வென்ற சென்னை.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் கொல்கத்தா!
தல 61 மரண மாஸ் கூட்டணி.... உற்சாகத்தில் ரசிகர்கள்..!
அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப்பெட்டியில் இடம்பெற்றிருந்த "தமிழ்"
திருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி! இணையத்தில் வைரலாகும் விடீயோ!
அணை மேம்பாட்டு மற்றும் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!