தவறுதலாக வரவான 86 லட்சம் ரூபாய்! செலவு செய்துவிட்டு தப்ப முயன்ற தம்பதி!

அமெரிக்காவில் உள்ள ஒரு தனி நபரின் வங்கி கணக்கில் இந்திய மதிப்பில் சுமார் 86  லட்சம்ரூபாய் தவறாக வரவு வைக்கப்பட்டது. ஆனால் அவர் அதனை வங்கியிடம் திரும்ப  செலுத்தாமல் செலவு செய்து தற்போது தனது கணவருடன்  சேர்ந்து சிறைக்கம்பி எண்ண காத்துக்கொண்டிருக்கிறார்.

பென்சில்வேனியா மாகாணத்திற்கு உட்பட்ட மாண்டோர் ஸ்வில்லி எனும் பகுதியை சேர்ந்தவர் டிப்பினி வில்லியம்சன் கணக்கில் தான் அமெரிக்க டாலர் 1 லட்சத்து 20 ஆயிரம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டது.

அந்த பணம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டது என வங்கி நிர்வாகம் கூறி பணத்தை வில்லியம்சனிடம் திருப்பி கேட்டது. ஆனால் அதற்க்குள் தனது கணவர் ராபர்ட் வில்லியம்சன் உடன்  சேர்ந்து கார், சொகுசு வாழக்கைக்கான பொருட்கள், நண்பர்களுடன் பார்ட்டி என பணத்தை காலி செய்தனர்.

இதனால் வங்கியிடம் திருப்பி செலுத்த பணமின்றி வங்கியுடனான இணைப்பை துண்டித்து கொண்டனர். இதனால் வங்கி நிர்வாகம் போலீஸ் மூலம், புகாரளித்து, அவர்களை பிடித்தனர் . தற்போது போலீசார் இவர்கள் மீது 3 பிரிவுகளில்கீழ்  வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.