அமெரிக்காவில் நடுவானில் மோதி கொண்ட இரண்டு விமானங்கள்! 7 பேர் பலி!

அமெரிக்காவில் நடுவானில் மோதி கொண்ட இரண்டு விமானங்கள். அமெரிக்காவின் அலாஸ்கா

By leena | Published: Aug 01, 2020 11:21 AM

அமெரிக்காவில் நடுவானில் மோதி கொண்ட இரண்டு விமானங்கள். அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின், சால்டோட்னா விமான நிலையம் அருகே , இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் மாத்திரம் உயிருக்கு போராடிய நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மற்ற அனைவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஒரு விமானத்தில் மாநில பிரதிநிதி கேரி நாப் தனியாக இருந்துள்ளார். இவர், குடியரசுக் கட்சிக்காரராகவும், மாநில மன்றத்தின் இரு கட்சி பெரும்பான்மையின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்த விபத்தில் கேரி நாப்பும் உயிரிழந்துள்ளார். மாநில பிரதிநிதி கேரி நாப் உட்பட, பைலட் கிரிகோரி பெல்(67), வழிகாட்டி டேவிட் ரோஜர்ஸ்(40),  காலேப் ஹல்சி (26), ஹீதர் ஹல்சி (25), மேக்கே ஹல்சி (24), மற்றும் கிர்ஸ்டின் ரைட் (23) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். கேரி நாப் அவர்களின் மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில், மற்ற 6 பேரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும்,  இந்த சம்பவம் குறித்து, FAA மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரித்து வருகின்றன.
Step2: Place in ads Display sections

unicc