பலரையும் பிரம்மிக்க வைக்கும் வகையில் புதிதாக களமிறங்கிய TVS Apache RTR 160 4V இன் சிறப்பம்சங்கள்

மக்களின் பெருமதிப்பை பெற்ற இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வரும் டி.வி.எஸ், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

மோட்டார் வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமான டிவிஎஸ்  நிறுவனம் புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பிரீமியம் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த பைக்கை அந்நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் சுதர்சன் வேணு அறிமுகப்படுத்தினார்.

 

டிவிஎஸ் நிறுவனத்திலிருந்து வெளிவந்த பைக்குகளில் அப்பாச்சி மாடல் பைக் தனி இடத்தை பிடித்துள்ளது.  அதற்கேற்ப பிரீமியம் பிரிவில் தனது தயாரிப்புகளை நிலைநிறுத்திக் கொள்வதற்காக புதிய வகை அப்பாச்சி வகைகளை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்போது அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.  கார்பரேட்டர், இஎப்ஐ என இரு பிரிவுகளிலும் இந்த பைக் கிடைக்கும். 160சிசி திறனில் இந்த பைக்கின் இன்ஜின் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் 5 கியர்கள் இந்த பைக்கில் இருக்கின்றன.

இந்த புதிய பைக் குறித்து சுதர்சன் வேணு கூறுகையில், “அப்பாச்சி சீரிஸ் வகை பைக்குகள் `ரேஸ்’ செயல்பாடுகளை மையமாக கொண்டு தயாரிக்கப்படுகின்றன. ஆர்டிஆர் 160 முதல் ஆர்ஆர் 310 வரை அப்பாச்சி பைக்குகள் முழுவதும் ரேசிங் பைக்குகளுக்கான அம்சங்களை கொண்டுள்ளன

12 ஆண்டுகளாக இந்திய இருசக்கர வாகன சந்தையில் நிலையான இடத்தை தக்கவைத்து வருகிறது Apache பைக். 12 ஆண்டுகளில் பல்வேறு கட்ட மாறுதல்களை சந்தித்துவரும் Apache, தற்போது மேலும் பல சிறப்பம்சங்களுடன், புதிய கவர்ச்சிகரமான தோற்றத்தில் புதிய ஃபிரேம், ரீவொர்க் செய்யப்பட்ட இஞ்சின், பிரேக், சஸ்பென்ஷன் என முற்றிலும் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

3 வேரியண்டுகளில், 3 வண்ணங்களில் இந்த புதிய Apache RTR 160 4V பைக் கிடைக்கிறது.

இஞ்சின்:

இந்த புதிய பைக்கில் 4 ஸ்டிரோக் ஆயில் கூல்டு, ஒற்றை சிலிண்டர் கொண்ட 159.7சிசி இஞ்சின் உள்ளது. Fuel injected மற்றும் carb என இருவகையான இஞ்சின் தொழில்நுட்பம் கொண்டு இந்த பைக் வெளிவருகிறது.

Fuel injected இஞ்சின் அதிகபட்சமாக 16.8 bhp ஆற்றலையும், 14.8 Nm திறனையும் வெளிப்படுத்துகிறது. இதே போல carb வகையிலான இஞ்சின் அதிகபட்சமாக  16.5 bhp ஆற்றலையும், 14.8 Nm திறனையும் வெளிப்படுத்துகிறது. இரண்டிலுமே 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.

முழுவதும் டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், டிரம் பிரேக் வேரியண்ட் பைக்கின் எடை 143 கிலோவாகவும், டிஸ்க் பிரேக் வேரியண்ட் பைக்கின் எடை 145 கிலோவாகவும் உள்ளது.

முகப்பில் டெலஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்புறம் showa monoshock சஸ்பென்ஷனும் கொண்டுள்ளது. Racing Red, Metallic Blue மற்றும் Knight Black என மூன்று வண்ணங்களில் இந்த பைக் கிடைக்கிறது.

புதிய Apache RTR 160 4V பைக்கின் விலைப் பட்டியல்:

Carb/Front Disc Brake ரூ. 81.490
Carb/Rear Disc Brake ரூ. 84,490
EFi/Rear Disc Brake ரூ. 89,990

(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை அடிப்படையில்)

அதிகபட்சவேகம்:

Apache RTR 160 4V பைக் அதிகபட்சமாக 114 கிமீ வேகத்தில் செல்லக்கூடியதாகும். இதன் Fuel injection வேரியண்ட் 0-60 கிமீ வேகத்தை 4.8 நொடிகளில் எட்டிவிடும், இதே போல இதன் carb வேரியண்ட் 0-60 கிமீ வேகத்தை 4.73 நொடிகளில் எட்டிவிடும்.

போட்டியாளர்கள்:

Bajaj pulsar NS160, Suzuki Gixxer, Honda CB Hornet 160 R மற்றும் Yamaha FZ-S I V2.0 போன்ற பைக்குகளுக்கு புதிய Apache RTR 160 4V கடும் போட்டியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment