இன்று இரவு முதல் களைக்கட்ட உள்ள நவராத்திரி கொண்டாட்டம்..!

நாடு முழுவதும் நவராத்திரி விழா 10 நாள்கள் நடைபெற உள்ளது.அமாவாசை நாளான இன்று

By Fahad | Published: Apr 06 2020 09:43 PM

நாடு முழுவதும் நவராத்திரி விழா 10 நாள்கள் நடைபெற உள்ளது.அமாவாசை நாளான இன்று நள்ளிரவு முதல் நவராத்திரி விழா தொடங்குகிறது. துர்க்கை பூஜை அக்டோபர் 3-ஆம் தேதியும் , சரஸ்வதி பூஜை 7-ம் தேதியும் , விஜயதசமி 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரியை வட இந்தியாவில் துர்கா பூஜை என அழைக்கப்படுகிறது.  நவராத்திரியின் போது பழங்கள் , பொறி , நாட்டு சர்க்கரை அவல் , கடலை போன்றவை வாழை இலையில் வைத்து படைக்க வேண்டும்.மேலும்  மலர்கள், தானியங்கள், பிரசாதம் பழங்கள் ஆகியவற்றை ஒன்பது நாள்களில்  ஒன்பது வகையில் படைக்கவேண்டும். முதல் மூன்று நாள்கள் லட்சுமி உகந்தவை .அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கு உகந்தவை. கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதியின் உகந்தவை  என கருதப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்பிகைக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. நவராத்திரிப் பண்டிகை ஒவ்வொரு வருடமும் புது பொம்மைகள் வாங்க வேண்டும் என்ற பழக்கம் மக்கள் மத்தியில் உள்ளது. அதனால் புது வரவாக உள்ள பொம்மைகளை மக்கள் வாங்கி செல்கின்றனர்.