இன்றைய (07.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

மேஷம் :பணத்தேவை பூர்த்தியாகும் நாள். பக்குவமான பேச்சால் காரியங்களை சாதித்துக்

By Fahad | Published: Apr 02 2020 08:13 PM

மேஷம் :பணத்தேவை பூர்த்தியாகும் நாள். பக்குவமான பேச்சால் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். மாமன் -மச்சான் வழியில் ஏற்பட்டிருந்த மனக்கசப்பு அகலும் குலதெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்துங்கள் நினைத்தவை நிறைவேறும். ரிஷபம் : அஞ்சல் வழியில்  ஆச்சரியப்பட வைக்கும் செய்தி கிடைக்கும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். எதிர்பார்த்தபடி ஆதாயம் வந்து சேரும். நண்பர்கள் உங்களுக்காக போட்டி போட்டுக் கொண்டு உதவ முன்வருவார்கள். மிதுனம் : நீங்கள் எதிர்பார்த்து காத்தருந்த அரசு வழி சலுகைகள் கிடைக்கும் நாள். பெண் பிள்ளைளால் பிரச்சினை தீரும். உத்தியோக மாற்றம் மற்றும் வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். கடகம் : இன்று மனதால் மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். பாதியில் நின்ற விட்டதே என்று எண்ணிய பணி மீண்டும் தொடரும். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை வெளிப்படும். கூட்டுத்தொழில் வெற்றித் தேடி தரும். வங்கிகளில் சேமிப்பானது உயரும். சிம்மம் : தொலைத்தூரத்தில் இருந்து நல்ல தகவல் வந்து சேருகின்ற நாள்.சுகங்களும், சந்தோ‌ஷங்களும் உள்ளத்தில் அதிகரிக்கும். வெளியூர்களுக்கு தொழில் ரீதியாக பயணம் மேற்கொள் வீர்கள். பணியாளர் தொல்லைகள் அகன்று புத்துணர்வு கிடைக்கும். கன்னி : இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதுகின்ற நாள். நீங்கள் எதாவது போட்டி, பந்தயங்களில் பங்கேற்றால் அதில் வெற்றி கிடைக் கும். பிள்ளைகள் வழியில் நல்லச் செய்தி வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான பொருட் களை வாங்கி மகிழுவீர்கள். துலாம் : முன்னேற்றப் பாதையை நோக்கி மும்முரமாக அடியெடுத்து வைக்கும் நாள். இன்று பணம் பல வழிகளில் வந்து  உங்களது பையை நிரப்பும். ஆற்றல் மிக்கவர்களின் ஆதரவு இன்று கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பர். விருச்சிகம் : நேற்றைய பிரச்சணை இன்று நல்ல முடிவிற்கு வரும்.மதியத்திற்கு மேல் மனக்குழப்பங்கள் அகலும். உங்கள் குணமறிந்து குடும்பத்தினர் நடந்து கொள்வர். வாங்கல் மற்றும் கொடுக்கல்கள் திருப்தி தரும். தனுசு : உங்களின் வளர்ச்சிக்கு துணையாக இருந்தவர்களை இன்று சந்தித்து மகிழும் வாய்ப்பு கிடைக்கும் நாள்.வரவு மற்றும் செலவு சமமாகும். வாகனமாற்றம் செய்யலாமா என சிந்தித்து கொண்டே இருப்பீர்கள். தொழில் பங்குதாரர்களிடம் சற்று விழிப்புணர்ச்சி தேவை. மகரம் : இன்று எடுக்கும் காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும் அற்புதமான நாள். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபம்  வந்து சேரும்.அரசியல்வாதிகளால் இன்று அனுகூலம் உண்டு. கும்பம் : அடுத்தவர்காக  காட்டிய அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும் நாள். சுபச்செய்திகள் இல்லம் வந்து சேரும் நாள்.கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். குடும்பச்சுமையானது கூடும். உத்தியோகத்தில்  கூடுதல் பொறுப்புகள் உங்களை நாடி வரும். மீனம் : தொலைதூரத்திலிருந்து இன்று நல்ல தகவல் வந்து சேரும் நாள். தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமைக்கு கெடுவிளைவித்து வந்தவர்கள் தானாக விலகுவார்கள். வருங்கால நலன்கருதி புதிய திட்டங்கள்  தீட்டுவீர்கள் மகிழ்வீர்கள்.