இன்று ஆஸ்திரேலியாவுடன் முதல் ஒருநாள் போட்டி ..!களமிறங்குவாரா ரோகித் சர்மா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள்

By venu | Published: Jan 14, 2020 09:05 AM

  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.
  • முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
இலங்கை அணியுடன் விளையாடிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.இதனையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது.இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரில் பங்கேற்பதற்கான ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வீரர்கள்  இந்தியா வந்துள்ளனர். முதல் ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணியின் வீரர்கள் விவரம் : விராட் கோலி (கேப்டன் ),ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, கே.எல் ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் அய்யர், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சிவம் தூபே, பும்ரா, சாஹல், குல்திப் யாதவ், நவ்தீப் சைனி, ஷ்ரதுல் தாகூர், மணிஷ் பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.ஆனால் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று  நடைபெறும்  போட்டியில் ரோகித் சர்மா கலந்து கொள்வாரா..? என்ற கேள்வி எழுந்து உள்ளது.ரோஹித் சர்மா மும்பையில் நடைபெற்ற பயிற்சி போட்டியில் ஈடுபட்டு இருந்தபோது காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc