தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி! திருவாரூரில் 10 பேர் கைது!

பயங்கரவாதிகள் 6 பேர் தமிழ்நாட்டில் ஊடுருவியதாக வந்த தகவலின் பேரில், தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்னர். இதில், தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில மணிநேரத்திற்கு முன்னர், நாகூரில் சையத் அபுதாகீர் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த போலீசார், அவரிடம் 2 மணிநேரத்துக்கும் மேலாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்திலும் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில்,  முத்துப்பேட்டையில் 10 பேரை போலீசார் பிடித்துள்ளனர். இவர்கள் மீது, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

முத்துப்பேட்டையில் இருந்து இலங்கைக்கு கடல்வழி தூரம் குறைவு என்பதால், அப்பகுதியில் போலீசார் அதிகமாக குவிக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில், 2000 போலீசார், கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், பொதுமக்கள் கூடும் பகுதிகள், கோவையின் எல்லை பகுதிகள் என அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.