பள்ளத்தில் சிக்கி வெடித்த டயர்.! தூக்கி வீசப்பட்ட மாணவர்கள்.! நெஞ்சை பதறவைத்த அதிர்ச்சி சம்பவம்..!

  • கோவையில் மாணவர்கள் மூவரும் ஆற்றுப் பாலத்தில் இருந்து போத்தனூர் நோக்கி

By Fahad | Published: Apr 02 2020 07:21 PM

  • கோவையில் மாணவர்கள் மூவரும் ஆற்றுப் பாலத்தில் இருந்து போத்தனூர் நோக்கி பைக்கில் சென்றுள்ளனர். 
  • திடீரென பைக் டயர் வெடித்து, பள்ளத்தில் விழுந்து பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொத்தனூர் அருகே சாய் நகரை சேர்ந்தவர் 17 வயதான ஆஷிக் பாட்ஷா. இவரது நண்பர்கள் முகமது நசீர், முகமது அஸ்கர் மூன்று பேரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வந்துள்ளனர். இந்த நிலையில் இரவு 12 மணியளவில் மாணவர்கள் மூவரும் ஆற்றுப் பாலத்தில் இருந்து போத்தனூர் நோக்கி பைக்கில் சென்றுள்ளனர். அதில், ஆஷிக் பாட்ஷா பைக்கை ஓட்டி செல்ல மற்ற இருவரும் பின்னால் அமர்ந்திருந்துள்ளனர். பின்னர் போத்தனூர் ரோடு சாய் நகர் சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையின் நடுவே இருந்த பள்ளத்தில் பைக்கை விட்டதும் பைக் டயர் வெடித்துள்ளது. விழுந்த வேகத்தில் மூன்று பேரும் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த முகமது நசீர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய மற்ற இருவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதில் ஆஷிக் பாட்ஷா மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். முகமது அஸ்கருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.