கோவையில் பரபரப்பு.! 11-ஆம் வகுப்பு மாணவரின் 'பிறப்புறுப்பை' பிடித்து துன்புறுத்திய ஆசிரியர்கள்.!

  • கோவையைச் சேர்ந்த பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பு மாணவரின் 'பிறப்புறுப்பை'

By Fahad | Published: Apr 08 2020 07:34 AM

  • கோவையைச் சேர்ந்த பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பு மாணவரின் 'பிறப்புறுப்பை' பிடித்து துன்புறுத்திய ஆசிரியர்கள்.
  • வகுப்பறையில் சேட்டை செய்ததாகவும், பாடத்தைக் கவனிக்காமல் செல்போனில் கவனம் செலுத்திதாக கூறப்படுகிறது.
கோவை மாவட்டம் சூலூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியில் மாணவர் ஒருவர் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினமும் வகுப்பறையில் சேட்டை செய்ததாகவும், பள்ளிக்கு செல்போனை எடுத்து வந்து, பாடத்தைக் கவனிக்காமல் செல்போனில் கவனம் செலுத்திதாகவும், கூறப்படுகிறது. இதுகுறித்து ஆசிரியர்கள் பலமுறை கண்டித்தும் மாணவர் அடங்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் கூடி மற்ற மாணவர்களை வகுப்பறையில் இருந்து வெளியேற்றி விட்டு கதவை இழுத்து மூடிவிட்டு அந்த மாணவரை பிறப்பு உறுப்பை பிடித்து இழுத்துவிட்டு துன்புறுத்தியதாக தெரிகிறது. இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வலியால் துடித்த அந்த மாணவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் அளிக்க மாணவரின் பெற்றோர்கள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Related Posts