வன்முறையில் ஈடுபட்டவர்கள் , பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் - மோடி.!

வன்முறையில் ஈடுபட்டவர்கள் , பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் - மோடி.!

  • லக்னோவில் உள்ள லோக்பவனில் வாஜ்பாயின் பிறந்த நாளான நேற்று அவரது சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
  • பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களும், வன்முறையில் ஈடுபட்டவர்களும் தாங்கள் செய்தது சரிதானா.. என சிந்தித்து பார்க்க வேண்டும்” என கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள லோக்பவனில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 25 அடி உயர வெண்கல சிலை வைக்கப்பட்டது. வாஜ்பாயின் பிறந்த நாளான நேற்று  அவரது சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் , மாநில கவர்னர் ஆனந்திபென் பட்டேல், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் லக்னோவில் நிறுவயுள்ள வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு  மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய மோடி , “ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்ட விவகாரங்கள் அமைதியான முறையில் தீர்வு காணப்பட்டது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து குடிபெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கவும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தரமான சாலைகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவை நமது உரிமையாகும். அவற்றை பாதுகாப்பது நமது கடமையாகும். தரமான கல்வி பெறுவது நமது உரிமையாகும். அந்த கல்வி நிறுவனங்களை பாதுகாப்பது, ஆசிரியர்களை மதிப்பது நமது கடமையாகும்.பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களும், வன்முறையில் ஈடுபட்டவர்களும் தாங்கள் செய்தது சரிதானா.. என சிந்தித்து பார்க்க வேண்டும்” என கூறினார்.

Latest Posts

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் கொடுத்தவர் இலங்கை நபர்..?
#IPL2020: கொல்கத்தாவை வீழ்த்தி 2-ம் இடத்திற்கு சென்ற பெங்களூர்..!
#IPL2020: மிரட்டலாக பந்து வீசிய பெங்களூர்.. 84 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா.!
சிம்பு நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா.?
"பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்க யாரும் நேரில் வர வேண்டாம்" - கே.எஸ்.அழகிரி!
இந்தியாவில் காற்று மாசுபாட்டால் 1.16  லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு - அமெரிக்க ஆய்வு
கமல்நாத்திற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!
பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி - மைசூரு சிறப்பு ரயில் இயக்கம்.!
ஆந்திராவில் 27 மாணவர்களுக்கு கொரோனா.. 4 பள்ளிகள் 10 நாட்களுக்கு மூடல்.!
மத்திய வங்கியில் கணக்கு துவங்குவதற்கான விண்ணப்பத்தை வேளாண் கூட்டுறவு வங்கியில் பெறலாம்.!