கண்களில் கருவளையம் ஏற்பட இது தான் காரணம்!

  • கண்களில் கருவளையம் ஏற்பட இது தான் காரணம்.
  • பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 

இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். உடல் ரீதியான பிரச்சனையாக இருந்தாலும், அழகு ரீதியான பிரச்சனையாக இருந்தாலும் வரும் முன்பே வரமால் தடுப்பதற்கான வழியை தேடுவது தான் நல்லது.

ஆனால், பிரச்சனைகள் வந்த பின்பு தான், பணத்தை செலவு செய்து செயற்கையான மருத்துவ முறைகளை கைக்கொண்டு இந்த பிரச்னைக்கு தீர்வு காண முயல்கின்றனர். அந்த வகையில் இன்றைய இளம் தலைமுறையினரின் அழகு  தான் கண்களில் ஏற்படும் கருவளையம்.

தற்போது இந்த பதிவில், கண்களில் கருவளையம் ஏற்பட என்ன காரணம் என்று பார்ப்போம்.

தோல் சுருக்கம்

கண்களை சுற்றி தோல் அதிகமாக சுருக்கம் அடைந்து, நாளடைவில் அந்த சுருக்கம் கருப்பு நிறமாக மாறி கரு வளையங்கள் தோன்ற காரணமாக அமைகிறது.

சத்தில்லாத உணவுகள்

இன்று நாம் உண்கின்ற அணைத்து உணவுகளிலும், நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் இருப்பதில்லை. சத்து இல்லாத உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதாலும் கண்களில் கருவளையம் ஏற்படுகிறது.

அதிக வேலை

நமக்கு நாம் ஒய்வை தேடுவது போல நமது உடல் உறுப்புகளுக்கும் ஒய்வு என்பது மிகவும் அவசியமான ஒன்று. அதிக நேரம் படித்தல், டிவி பார்த்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் போதும் கருவளையம் ஏற்படும்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.