தீ வைத்து எரிக்கப்பட்ட வாக்குப்பெட்டி! மறுவாக்குப்பதிவு நடைபெறும் என ஆட்சியர் அறிவிப்பு!

  • திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கம் வாக்குச்சாவடியில் உள்ள வாக்கு பெட்டியை சில மர்ம நபர்கள் தீ வைத்துக் கொளுத்தினர்.
  • இதன் காரணமாக அந்த வாக்குச்சாவடியில் மீண்டும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் உள்ள  156 ஒன்றியங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் என நான்கு பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும்போது பப்பரம்பக்கம் வாக்குச் சாவடியில் இருந்த வாக்கு பெட்டியை சில மர்ம நபர்கள், வாக்குச்சாவடியில்  இருந்து வெளியே எடுத்து வந்து தீ வைத்து கொளுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னார் வாக்குப்பதிவு அங்கு நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் மீண்டும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என திருவள்ளூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.