20 ஓவர் போட்டியில் இந்த 3 வீரர்கள் இரட்டை சதம் அடிப்பார்கள்.! யுவராஜ் சிங்கின் லிஸ்ட்.!

20 ஓவர் போட்டியில் இந்த 3 வீரர்கள் இரட்டை சதம் அடிப்பார்கள்.! யுவராஜ் சிங்கின் லிஸ்ட்.!

  • 20 ஓவர் போட்டியில் 3 வீரர்களால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று யுவராஜ்சிங்  தெரிவித்துள்ளார். இரட்டை சதம் அடிப்பது மிகவும் கடினமானது என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால் தற்போது அதிரடியாக விளையாடி வருவதை பார்த்தால் எதுவும் சாத்தியமில்லை என கூற முடியாது என தெரிவித்தார்.
இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக இருந்த யுவராஜ் சிங் கடந்த ஆண்டு அனைத்து விதமான  போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பின் கனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 போட்டிகளில் விளையாடினார். தற்போது ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயிக்கு நிதி திரட்டும் வகையில், நடைபெற்ற புஷ்ஃபயர் கிரிக்கெட் போட்டியில் யுவராஜ் சிங் கலந்துகொண்டு விளையாடினார். கடந்த 2007-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 6 சிக்சர்களை அடித்து சாதனை படைத்தார். மேலும், 20 ஓவர் சர்வதேச போட்டியில் 12 பந்தில் அரை சதத்தை அடித்து சாதனை புரிந்தார். இந்நிலையில், 20 ஓவர் போட்டியில் 3 வீரர்களால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று யுவராஜ்சிங் தற்போது தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ரோஹித் சர்மா, டிவில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல் இவர்கள் மூவரும் டி20 போட்டியில் இரட்டை சதம் அடிக்க வாய்ப்புள்ளது, ஆனால் இதில் இருவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர் என தெரிவித்தார். மேலும், 20 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடிப்பது மிகவும் கடினமானது என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால் அது சாத்தியமில்லை என்று என்னால் சொல்ல முடியும். தற்போது நடைபெற்று வரும் போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை பார்க்கும் போது முடியாதது எதுவுமில்லை, அதனால் காத்திருப்போம் என்றும் சிறந்ததை எதிர்பார்ப்போம் என்றும் தெரிவித்தார்.

Latest Posts

மக்கள் மறக்க மாட்டார்கள் அடிமைகளே! சென்னை மழைவெள்ளம் குறித்து உதயநிதி ட்வீட்!
காஷ்மீரில் பாஜக கட்சியின் இளைஞரணி பொதுச்செயலாளர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை.
பிரான்ஸ் நாட்டு தேவாலயத்தில் பயங்கரம்... தீவிரவாதி வெறிச்செயல்.. தலையை துண்டித்த கொடூரம்...
ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும்... மாநில அரசு அறிவிப்பு...
ஒப்புதல் அளிக்காத ஆளுநர்... சட்டமாக்கிய அரசு... அரசாணை வெளியிட்டு அதிரடி....
மிலாடி நபி திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வாழ்த்து...
#7.5%-Reservation: இதற்கு ஏன் 45 நாட்கள் தாமதம் ? ஏன் கிடப்பில் போட்டார்கள் ? - மு.க.ஸ்டாலின் டீவீட்
ஜம்மு-காஷ்மீர் பயகங்கரவாத தாக்குதலில் பாஜாகவினர் மூவர் பலி
#IPL2020 : கெய்க்வாட் அரைசதம் ! கடைசி பந்தில் சென்னை அணி வெற்றி
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு -அரசாணை வெளியிட்டது தமிழக அரசு