காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபைக்கு கொண்டு செல்வோம்-பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

மாநிலங்களவையில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையிலும், மக்களவையிலும் கடும் விவாதத்துக்கு பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றினார்.

இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.இதனையடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது.அப்பொழுது அந்நாட்டு பிரதமர்  இம்ரான் கான் பேசினார். அவர் பேசுகையில்,காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபைக்கு கொண்டு செல்வோம்.இந்தியாவில் சிறுபான்மையினர் நடத்தப்படுவது குறித்து சர்வதேச சமூகத்தின் முன் எடுத்துரைப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசினார்.