2000 ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு ரூ.3.54 – நிதி அமைச்சகம் தகவல்!

புதிதாக ஒரு 2000 ரூபாய் நோட்டை அச்சடிக்க 3 ரூபாய் 58 பைசா ஆகும் என்று மத்திய நிதி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் மாநிலங்களைவையில் எழுத்து வடிவில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ம் ஆண்டு முதல் புதிதாக 2000 ரூபாய் நோட்டானது அச்சடிக்கப்பட்டு வருகிறது. மத்திய ரிசர்வ் வங்கி மூலம் PRPNMPL நிறுவனம் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வருகிறது.ரோஸ் வண்ணத்தில் சிறிதாக இருக்கும் இந்த தாளானது நவீன முறையில் அச்சடிப்படுகிறது. கடந்த 2018-19 ம் ஆண்டு 2000 ம் ரூபாய் நோட்டு அச்சடிக்க ரூ.4.18 செலவான நிலையில், 2018-19 ம் ஆண்டு 65 பைசா குறைந்து ரூ.3.54 ஆகியுள்ளது.

இதே போல். 500 ரூபாய் நோட்டு அச்சடிக்க 2017-18 ஆண்டு காலகட்டத்தில் ரூ.2.39 ம் 2018-19 ம் ஆண்டு ரூ.2.13 செலவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ.200 அச்சடிக்க ரூ.2.24 செலவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மொத்தமாக 2017-18 ஆண்டு காலகட்டத்தில் ரூ.7,965 கோடி செலவாகி இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.