கேரள வெள்ள பாதிப்பில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்-ராகுல்காந்தி

தென் மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.கேரள மாநிலத்தில்  கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும்  மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது.வயநாடு மாவட்டம் பெரும் சேதத்துக்கு உள்ளாகி உள்ளது.மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராகுல் காந்தி கேரளாவிற்கு சென்றார்.அங்கு தனது மக்களவை தொகுதியான வயநாட்டிற்கு சென்றார்.

அங்கிருக்கும்  வெள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் ராகுல் காந்தி,மேலும் மழை வெள்ளத்தில் சேதமடைந்த பகுதிகளையும் பார்வையிட்டார் ராகுல் காந்தி.

வயநாட்டில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபின் ராகுல்காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கேரள வெள்ள பாதிப்பில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வீடு, உறவினர்களை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

கேரள வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு ஆகும்.கூடிய விரைவில் வெள்ள நிவாரணம், நஷ்ட ஈடு கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.